காதலிக்கிறேன் நான்

காதலிக்கிறேன் நான்
பூக்களை காதலிக்கிறேன்
அனைத்தும் மறந்து மூழ்கி
நான் அதுவாக
அது நானாக மாறி
இருக்கிறேன்
நோக்கம் தேனல்ல
நாங்கள் காதலில்
இருவேறல்ல
நான் மென்மையை
பெற்றிருந்தேன்
அது கடினத்தை பெற்றிருந்தது
நான் வாசம் பெற்றிருந்தேன்
அது சுவாசம் பெற்றிருந்தது
நான் காற்றில் அசைகிறேன்
அது இதழ்கள் பிசைகிறது
நான் அர்த்தநாரியாகவில்லை
நான் அதன்
அர்த்தமாகிவிட்டேன்
இப்போது உணர்கிறேன்
மலர்கள் தேனிற்காக மட்டுமல்ல
இப்போது உணர்கிறேன்
மலர்கள் மணத்திற்காக மட்டுமல்ல
இப்போது உணர்கிறேன்
மலர்கள் தேவைக்காக மட்டுமல்ல
இப்போது தான் உணர்கிறேன்
எதுவும் எதற்காகவும் இல்லை
காதலிக்கிறேன் நான்
தேவைகளை தொலைத்துவிட்டு
காதலிக்கிறேன் நான்
சராசரி பார்வைகளை களைந்துவிட்டு
காதலிக்கிறேன் நான்
நான் அதுவாக மாறிவிட்டு
அனைத்தையும் காதலிக்கிறேன் நான்
நானே அனைத்துமாய் ஆகிவிட்டு

எழுதியவர் : கவியரசன் (9-Oct-15, 11:56 am)
Tanglish : kathalikiren naan
பார்வை : 194

மேலே