நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை

உங்கள் கணவரை நேசியுங்கள்!

அடிக்கடி டீயோ, காபியோ
கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை
புத்துணர்ச்சியுடன் கேட்க
விருப்புகிறார் என்று
அர்த்தம்.

மற்ற அழகான பெண்களை
பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ
என்ன அழகான்னு செக்
பண்றார்னு அர்த்தம்.

உங்கள் சமையலை குறை
கூறிக்கொண்டே
இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன்
கூடிக்கொண்டே போகிறது
என்று அர்த்தம்.

இரவில் குறைட்டை விட்டு
உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
உங்களை மணந்தபின் தான்
நிம்மதியாக உறங்குகிறார்
என்று அர்த்தம்.

உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
உங்கள் எதிர்காலத்துக்கு பணம்
சேமித்துவைக்கிறார் என்று
அர்த்தம்.

நேசித்தே ஆகவேண்டும்
உங்களுக்கு வேற வழியும்
இல்லை.
ஏனென்றால்.........

கணவனை
கொல்வது
சட்டப்படி குற்றம்!😎

எழுதியவர் : செல்வமணி (10-Oct-15, 8:29 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே