வாழ்வதொன்றும் கடிதில்லை
கண் பார்ப்பது காதில் கேட்பது ரசிக்க மட்டுமே,
மனதில் பட்டதெல்லாமும் பேசாது
எது பேசினால் கேட்பதற்கு இனிக்குமோ
அதை மட்டுமே பேசினால்
உன்னை சுற்றி கூட்டம் இருக்கும்.
ஏனெனில்
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்
என்றறிவாய்!
கண்ணில் கண்டதெல்லாமும் காட்சி தான், சாட்சி ஆகாது
என்றறிந்தால் பார்ப்பதெல்லாம் பகிர அல்ல
என்றுணர்வாய்.
அப்படி இருந்தால்
உன்னைசுற்றி ஒளிவட்டம் தென்படும்.
ஏனெனில்
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரித்தறிவதே மெய்
என்றறிவாய்!
ஆசைகள் கிளர்ந்தெழுவன
நிராசைகள் தகுதி மீறின
ஆத்திரம் கோபம் எரிச்சல் ஏக்கம்
விட்டொழித்தல் நலம் பயக்கும்
மற்றபடி
அடைவதை ரசி ருசி
கிடைப்பதை கொள், கொடு, கொடுத்துப்பெறு
அடைவது அதிர்ஷ்டம் அது தான் சந்தோஷம்
அடையமுடியாததெல்லாம்
வரலாம் வராமல் போகலாம்
வாட்டம் நோட்டம் வெட்கம் வேதனை விட்டொழி
வாழு வாழ விடு
அவனவன் விதிப்பயன் அதற்கெதற்கு
போட்டி பொறாமை
உனக்குரியது உனக்கும் கிடைக்கும்
அருகில் வர முயற்சி செய்
உழை, களைப்படைய
விழை, வேண்டுவது கிட்ட
களை, குறைகளை தவிர்க்க
அளவே வளம்
அழகே நலம்
அது தான் நிஜம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
