நமக்கு நாமே
ஏன்டா கோண மூக்கு கபாலி, நம்ம தலைவரு மாட்டுப் பல்லு மாரி 'நமக்கு நாமே'ன்னு ஒரு திட்டம் அறிவிச்சிருக்கறாராமே அதைப் பத்திக் கொஞ்சம் விரிவாச் சொல்லுடா.
அட கண்ணுக்குட்டி காளி, பண்டிகைகங்கெல்லாம் நெருங்கிட்டு வருது. நம்ம வேட்டைக்கான நல்ல பருவம் இது. போலீஸ் கையிலே மாட்டாம நமக்கு நாமே ஒரு மூணு அடுக்குப் பாதுகாப்பு வளையத்த ஏற்படுத்திக்கணுமாம். போலீஸ் கையிலே மாட்டாம யாரு அதிகபட்சமா நகைகங்களைத் திருடிச் சாதனை படைக்கிறாங்களோ அவுங்களப் பாராட்டி சிறப்புப் பட்டம் வழங்கப் போறாராம் தலைவரு.