என்றுமே உன்னுடன் நான்!

சில மணி நேரப் பொழுதில்
உன் கவலை எல்லாம் மறந்து
கல கலவெனச் சிரிக்கின்றாயே!
இதுவே நமது
நட்புக்குக் கிடைத்த வெற்றி!
இந்தக்
கட்டிடக் காட்டிற்குள்
கண்டெடுத்த நட்பாய்…
உன் மனம்
சோர்ந்து போகும் போதெல்லாம்
சோகம் தீர்த்து
தோள் கொடுக்கும்
அன்புத் தோழனாய்
என்றுமே உன்னுடன் நான்.....!!!!

எழுதியவர் : ரெங்கா (2-Jun-11, 2:18 pm)
சேர்த்தது : renga
பார்வை : 641

மேலே