குழம்பி காதலன்
காலையில் எழுந்ததும் கவிதைகள் படிப்பேன்
இரண்டு பக்கம் புரட்டியதும்
என் மரமேஜைக்கு ஒரு குவளை குழம்பி வரும்.
அதை சுவைக்கும் அந்த நொடிகளில்
இந்த வாழ்வின் பெரும்சுவையை உணர்ந்தேன்
இந்த வாழ்வின் கசப்பையும்கூட உணர்ந்தேன்.
பிறகு சமையலறையிருந்து ஒரு குரல் வரும்
நேரம் ஆயிடுத்தென்று.
அரை மனதாய் எழுந்து குளியலரை செல்வேன்.
அரைகுறை குளியலோடும் அரைகுறை உணவோடும்
சட்டையை IN செய்தபடி தொடங்கும்
அவசர உலகத்தின் அன்றைய நாள்.
இந்த அவரச உலகத்தில்
இந்த வாழ்வின் இன்பத்தை மீட்டுரு செய்யவே
காலையிலும், நற்பகலிலும், அந்தி மாலையிலும்
இடையிடைய தோன்றும் நேரங்களில்
குழம்பி சுவைக்கிறேன்.