என் மகனுக்கு பிறந்தநாள்

தரணி ஆளப்பிறந்தவனே
உன் அன்னை பாண்டியின்
கருவில் உருவாகி என் அண்ணன் பாரதியின்
கைகளில் தவழ்பழனே....

என் அண்ணன் அண்ணியின்
அளவற்ற அன்பில் விளைந்த
வெகுமதியே எங்கள் அனபெனும் வானத்தில் தவழும் முழுமதியே....

கிள்ளை மொழி பேசி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் என் தலைமகனே
எங்கள் தமிழ் மகனே.....

மழலைச் சிரிப்பால் அப்புச்சி என்று சொல்லி என் தந்தையின் மெய்ப் பசி மறக்கச்செய்த எங்கள் தவச் செல்வனே........

என் அன்னை தமிழரசிக்கு அப்பத்தா எனும் அரியணையை தந்து, என் அண்ணனை கல்யாண அப்பாவாக்கிக் களிப்புற்றவனே....

அப்பா என அன்போடு அழைத்து என் அகில உலகத்தயே ஆனந்தத்தில் பரவச படுத்தியவனே
எங்கள் பாலகனே....

என் அத்தைகளுக்கு அம்மாச்சி என மகுடம் சூடி என் தாய்மாமன்களை தாத்தவாக்கிய எங்கள் தவப் புதல்வனே...

தரணி ஆளப் புறப்படும் முன் உன் செல்லச் சிரிப்பால் எங்கள் மனதை ஆளும் மானவனே
எங்கள் நாயகனே.....

சிதறிய விண்மீன்களை சிறுகச் சிறுகச் சேர்த்து சிந்தை எல்லாம் இன்பத்தோடு சிறகு விரித்து மகனே நீ இவ்வுலகை வலம் வர வாழ்த்தும் உன் சித்தப்பா.........
-வாணிதாசன்

எழுதியவர் : வாணிதாசன் (11-Oct-15, 11:16 am)
சேர்த்தது : வாணிதாசன்
பார்வை : 342

மேலே