மழை
மழையே மழையே
மன்மத மழையே
உயிர்கள் மனதோடு
உரையாடும் மழையே....
உன்னால் நனைந்தால்
உஷ்ணம் வருமாமே
உஷ்ணம்
உள்ளத்திலா உடலிலா.....
விளக்கம் சொல்ல
விரைந்து வா....
காட்டன் சுடிதாரில்
கடை வீதி செல்கிறேன்
தொட்டவுடன் நனைவேன்
சட்டென்று வா....
முதல் துளி மூக்கின் நுனியில்
இரண்டாம் துளி இடையின் சரிவில்
மூன்றாம் துளி பட்டவுடன்
முகமெல்லாம் சிவந்தது
விலகிகிடந்த துப்பட்டாவை
விரல்கள் இழுத்து மறைத்தது.
பெண்ணே......
மேக பஞ்சை
வேக வைத்ததினால்
வேதனையோடு வெளியேறும்
வெள்ளை ரத்தம் நான்....
பருவத்தை
பதம் பார்க்கும்
பானம் அல்ல நான்....
சொட்டு சொட்டாய் தொடங்கினேன்
சோர்வின்றி தொடர்வேன்
பசியாய் இருக்கும் பள்ளத்தாக்குகள்
பசியாற வேண்டும்....
காய்ந்து கிடக்கும் கரிசல் காடுகள்
கனிய வேண்டும்.
வேகமாக வீட்டுக்கு போ
விட்டு விட்ட பாடங்களை படி.....