நேயம்



தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

எழுதியவர் : மன்னார் அமுதன் (2-Jun-11, 3:11 pm)
சேர்த்தது : மன்னார் அமுதன்
Tanglish : neyam
பார்வை : 308

மேலே