உண்மை அறிவாய் மனமே

உண்மை அறிவாய் மனமே...!!!
"இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்..
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை எண்ணலாகுமோ..
இல்லை என்றும் உண்டு என்றும் இரண்டும் ஒன்றி நின்றதை..
எல்லை கண்டு கொண்டோரினி பிறப்பதிங்கு இல்லையே"
கடவுள் இல்லை என்று உரைப்பவர்கள் தன் கண்ணுக்குத் தெரியும் இடம் வரையே உலகம் உள்ளது அதன் பின் உலகம் இல்லை என்று உரைப்பவர்களே.. உண்மையை அறியாது உரைப்பதால் நாமே அறிவற்றவர்கள் ஆகிறோம்.உலகில் நடைபெறும் அனைத்தும் காரண காரியம் கொண்டே நடைபெறுகிறது.இவ்வுண்மையை அறிவாய் மனமே..!!!