சென்னை மாநகராட்சி - சிஎம்ஜேசு

ஆட்சிக்குள் உள்ளது நகராட்சி - நம்
சாட்சிக்கு வளர்கிறது மாநகராட்சி

நூற்றாண்டுகள் ஓடியும் ஓடியாமல்
வளர்ந்து நிற்கும் நம் தமிழ் நாடு

நெஞ்சம் நிறைந்து தஞ்சம் அடையும் - வழி
இல்லாதவர்களின் வாழ்விடம் சென்னை

கணக்கிடும் அளவிற்கு இருந்த சாலைகள்
கணக்கிட முடியாதவைகளாக மாற்றப்பட்டுள்ளது

சொத்து வரி ,குடிநீர் வரி ,
பாதாள சாக்கடை வரி என

தனக்கென பூங்காக்கள் ,
வருமான இடங்கள் ,வாடகை நிலங்கள் கூட்டி

படிப்படியாக உயர்ந்து இன்று பல மக்கள்
பணிகளை முன்னெடுத்துள்ளது

குளங்கள் ,பாலங்கள் ,சுரங்கப் பாதைகள்
மக்கள் நலங்கள் ,வளங்கள் காண

அழகிய சாலைகள் ,வீதிகள் என மக்களின்
பாதங்கள் படும் நடைபாதைகள், கோடுகள் என்று தன்

அத்தியாவசிய பணிகளை
அருமையாக செய்து வருகிறது

வழிக்காட்டி பலகைகள் ,இருளில் வெளிச்சங்கள்
கல்விக் கூடங்கள் போன்ற பணிகள் வளர்கின்றது

சில பல இடங்களில் போடப்பட்ட கோடுகளும்
வேக கட்டுப்பாட்டு மேடுகளும் மனம் லயிக்க செய்கிறது

இனி நம் மாநகராட்சி

விரைந்து முடிக்கும் பணியாளர்களை தன்
உள் நிறைத்துக் கொண்டால்

சுத்தங்களை விரைந்து செய்யலாம்
வீதிகளின் ஓரங்களை அழகாக்கலாம்

புழுதிகள் இல்லாத பழுதுகள் ஆகாத
மக்கள் வாழும் இடங்களாக என்றும் மாற்றலாம்

சுத்தங்களை பின்பற்றும் நகர்களுக்கு
வரி சலுகைகள் வழங்கி கவ்ரவிக்கலாம்

இலவச குடிநீர் நிலையங்கள் அமைக்கலாம்
முதலுதவி முற்றங்கள் கொண்டு வரலாம்

சிதறுண்ட குப்பைகளை பேரல்களில் நிரப்பி
காலை பணியாளர்களைக் அமர்த்தி அகற்றலாம்

பணிகளைப் பார்வையிட தனித் தனி
அதிகாரிகளை வேலையில் அமர்த்தலாம்

போஸ்டர்கள் இல்லாமல் சுவர் கிறுக்கல்கள் இல்லாமல்
வாகனங்கள் பிரிந்து செல்லும் எல்லைக் பாதைகள் சமைக்கலாம்

நான் 44 ஆண்டுகளாக பார்த்தவரையில் - சென்னை
இன்று அழகாகவும் நவீனமாகவும் மாறியுள்ளது

அதை இன்னும் மெருகேற்றி ,அசுத்தங்கள் களைந்து
கேபிள் ஒயர்களை ஒழுங்கு படுத்தி உன்னதம் கண்டு

ஈ. பி ஒயர்களுக்கு புதிய வழிகள் கொண்டு
பள்ளங்கள் இல்லாமல் மணல்மேடு குவியாமல் பார்த்துக் கொண்டால்

பார்க்கும் இடமெங்கிலும் பளிச்சென மின்னிடும் - நம்
சென்னை மாநகராட்சி என்றுரைக்கும் வாழ்த்துக்கள் குவியும்

இனி நம் நாட்டு வருங்காலம்

நம்ம ஊரும் சிங்கப்பூராம்
நம் தமிழ் மக்கள் உலகம் எங்குமாம்

வாழ்க ! நம் சென்னை மாநகராட்சி
வளர்க ! மக்கள் விரும்பும் பணிகள்

நான் படித்த அரசு பள்ளியையும் இசைக்கல்லூரியையும்
இன்றுவரை என் ஆலயமாக பார்க்கிறேன்

இந்த பதிவு

( சென்னை மாநகருக்குள் சுற்றித் திரிந்து வீடுகளில் இசையினை வளர்க்கும் ஒரு
இசை ஆசிரியனின் எண்ணங்கள் இது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல )

எழுதியவர் : சி.எம் ,ஜேசு (12-Oct-15, 12:06 am)
பார்வை : 192

மேலே