ஏழாவது அறிவோ
ஏழாவது அறிவோ உன் உருவம் - இறை
காணாத அழகோ உன் பருவம்
மத சுவைகளோ பாவம் உனக்கு - இறை
சுக சுமைகளோ சாபம் உனக்கு
வான் விருந்தோ நிகர் உனக்கு - புவிக்
கோன் விருதோ நிலை உனக்கு
இறை உனை படைத்ததாலோ
'புதிர்' இறை பெயர் புனிதம் - உன்
துணை எனை வியந்ததாலோ
பிறப்பு இயல் பெயர் மனிதம்
கண்டதும் காணாததும் - இறை
விண்டதும் விள்ளாததும் - உன்
அன்புருவோ இல்லை ... உன் அறிவழகோ !