இதுவும் தான்
நிழலுக்காக இல்லை
நிஜத்திற்காகவே வழக்காடுகின்றேன்
சொப்பண அதிகாரங்களில்
சொர்க்கத்தை காணவிரும்புகிறேன்
பக்குவச் சுவர்களில் நேசத்தை
தேடுபவன் நான்
ஆளப்பட்ட வர்க்கத்திற்காக
துயரப்பட்டு துவண்டுவிடவில்லை
ஆண்டவனை ஆட்டிவைக்க
அதிகாரம் கேக்கிறேன்
எந்த வேள்வியினாலும்
எரிக்கமுடியாத எண்ணம் தேவை
ஏட்டெடுத்து படித்தவரெல்லாம்
ஏர்பிடிக்கும் உத்தியை தேடுகிறேன
கீழ்விழுந்த நிலவொளியில்
வானிற்கு அடையாளம் கேக்கிறேன்
வர்ணிப்பு சங்கதியெல்லாம்
தடுக்காத கவிதை கேட்பேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
