விடையில்லா கேள்விகள்

யாருக்கும் கேள்வி
கேட்க தெரிவதில்லை ,
இருக்கும் பதில்களுக்கான
கேள்விகளையே,
இல்லாதவற்றின்
கேள்விகளாய்
கேட்டுத் தெளிகிறார்கள்.
சில நேரங்களில்
பதிலை வைத்துக்கொண்டு
கேள்விகளை தேட வேண்டி
இருக்கிறது .
தகிக்கும் சூரியனிடம்
ஏன் எனைச் சுட்டாய் ? என
கேட்டு நடக்கும்
எதிர் வீட்டுக் குழந்தையிடம்
இருக்கிறது ......
பதிலே இல்லாத
கேள்விகள் பல.

எழுதியவர் : மணிமாறன் (12-Oct-15, 6:06 pm)
பார்வை : 206

மேலே