குற்ற உணர்ச்சி
எறும்புகளின் நீண்ட ஊர்வலத்தை
ஒரு 'பாறை 'யென விழுந்து
சிதைத்து விட்டது என் [கால்]பெருவிரல் .
எந்த மீடியாவும் அறியாத
உயிச்சேதம் மிகுந்த
இந்த பெரும் விபத்தில்,
எறும்புகளோடு சேர்ந்து
[மனதால்] பாதிக்கப்பட்டவனும் நானே
தண்டனை ஏதுமின்றி
தப்பித்து விட்டவனும் நானே.
................................................................
குற்ற உணர்ச்சியை விட
பெரிய தண்டனை ஏதுமுண்டோ.?