மாற்ற வேண்டிய சட்டங்கள்

பூ போன்ற மனம் உள்ள பெண்களை
தேன் பருகும் வண்டாக நுகர துடிக்கும் ஆண்களுக்கு
சுற்றுலா பயணம் போல நமது அரசு வழங்கும் தண்டனை
-சில வருட சிறைவாசம்

பயணம் முடிந்து திரும்பும் அவர்களின்
தாகம் தான் தீர போகிறதா?
இல்லை அவர்கள் தான் திருந்த போகிறார்களா?

மாறாக ஏன் வெட்டி எரிய கூடாது
சாக்கடை புழு போன்ற அவர்களின் அங்கங்களை?

தட்டி வளர்க்க ஆல் இல்லாமல்
காட்டு செடியாக வளரும் குழந்தைகள் வழி மாறி
பசி போக்க திருடினால் நமது அரசு வழங்கும் தண்டனை
-சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாழ்கை

நான்கு சுவருக்குள் தவறு செய்தவரை
பார்த்து வளரும் குழந்தைக்கு மனதில் பதிய போவது என்ன?
திருந்தும் எண்ணமா?

மாறாக ஏன் அவர்களை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து
அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கை ஏற்படுத்த கூடாது?

லஞ்சம் என்னும் புற்றுநோயால்
உலக மக்களை முடமாக்கும் அரசியல் சக்கரவர்திகளுக்கு
நமது அரசு வழங்கும் தண்டனை
- சில வருட சிறைவாசம்

பாவம் அந்த சட்டம் அறியவில்லை
பெயில் எனும் ஆயுதம் கொண்டு தப்பித்து
அவர்களின் சேவையை தொடர்வது தான்
அரசியலின் ஆரம்ப பாடம் என்று....

மாறாக ஏன் பறிக்க கூடாது
அவர்களின் பதவியையும்,
அரசியலின் அடித்தள உறுப்பினர் என்ற அடையாளத்தையும்?

காலங்களும் காலத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பமும்
வளர்ந்து விட்ட நிலையில்
ஏன் நாம் மாற்ற கூடாது சில மாற்றங்களை
இன்றைய சட்ட புத்தகத்தில்???

எழுதியவர் : பிரதீப் ரா (13-Oct-15, 10:47 am)
பார்வை : 552

மேலே