உண்மையாய் ஏனோ வாழ முடிவதில்லை
உண்மையாய் ஏனோ வாழ முடிவதில்லை,
சில பொய்கள் சௌகரியம்
சில, சரிக்கட்ட சமாளிக்க.
நலமாயிருப்பதாய்
சொல்லும் பொய்யுடனே
நம் உரையாடல் தொடங்குகிறது
அரிதார வார்த்தைகள்
கண்ணீரில் கரைந்தே போகின்றன
எப்போதும் மகிழ்ச்சியாயிரு
என்றே முடிக்கிறோம் உரையாடலை
அது முடியாது என்று அறிந்தே!