அம்மா

அம்மா என்றொரு ஆலமரம்
அதனடியிலே நாங்களெல்லாம் பிள்ளைமரம்
ஒரனுவிலிருந்து உருவாக்கி ஒர்உயிராக்க
ஓராயிரம் துயர்கொண்டால் எங்கள் அம்மா...!

முன்னூரூ நாட்களில் முழுதாய் ஈன்றெடுத்த
முதற்கடவுல் எங்கள் அம்மா...
முழுகாத காலத்தில் முடியாத நிலையிலும்
முதல் ஆளாய் நின்றவள் எங்கள் அம்மா...!

முலைப்பாலை நான்பருகி முழுஆளாய் நான்வளர
முனைப்போடு இருந்தால் எங்கள் அம்மா...
தாயன்பை பாலோடு தாலாட்டு பாட்டோடு
தமயனாய் நான் பிறந்தேன் - எங்கள் அம்மா!

கண்ணே மணியே என்றால்
பொன்னே பொருளே என்றால்
என் அப்பா அவர்தான் என்றால்
அம்மா அம்மா என்றேன் நான்..!

நீ இல்லாமல் நான் இல்லை
நீ இல்ல இவ்வுலகமும் இல்லை
அம்மா இல்லாத அகிலமே இல்லை
அம்மா என்றால் சும்மா இல்லை...!

எழுதியவர் : ரவி Shrinivasan (13-Oct-15, 12:01 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : amma
பார்வை : 66

மேலே