கண்ணா நீ நல்ல கந்தா
" கண்ணா நீ நல்ல கந்தா "
கிழிந்த கடவுள்ப் படக் குப்பையை
எரித்துப் பொசுக்கினான் சிறுவன்.
அம்மா ! குப்பை தான் இல்லையே...இனிமேல்
உம்மாச்சி கண்ணைக் குத்தாதே... என்றான் சிறுவன்.
ஆமாடா...கண்ணா ! நீ நல்ல கந்தன் !! என்றாள் அம்மா.