கண்மாய்
சிலு சிலு குளிர் காத்து புது மழைய கூட்டி வர, ஒதுங்க இடம் தேடி எல்லாரும் ஓடயில, எனக்குள்ள குறுகுறுப்பு கண்மாயில தண்ணி பெருகும், மீன் பிடிக்க போலாமுனு!
தாத்தாவோட மீன் பிடிக்க போனது ஞாபகம் வர, என் பேரனுக்கும் நான் சொல்லிக் கொடுப்பேன் என மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்!
அப்பறந்தான் உண்மை உரைத்தது , பாப்போம் அதுவர கண்மாய் இருக்குதானு !