பொய்யன் ஆக்குகிறாய்

காதல் என்ற
ஒற்றைச் சொல்லில்
குருடாகிக் கண்களை
மூடிக் கொண்டு
பள்ளத்தில் விழுகிறாய்

குண்டும் குழியும்
நிறைந்தது தான்
நிலவின் மேற்புறம்
என்று அறிந்தும்
நிலவு முகம் என
உன்னைச் சொன்னால்
ஏமாந்து
மகிழ்கிறாய்

மலையின் முடி
மூடும் வெண்முகில்
அழகு என்றால்
துப்பட்டாவை சரிசெய்து
கண் பட்டதால்
துன்பப்படுவது போல்
நடிக்கிறாய்

கடக ரேகைக்கும்
மகர ரேகைக்கும்
இடையில் இருப்பது
பூமத்திய ரேகை
நீயோ நேர் வகிடு
எனப் பூ சுற்றுகிறாய்!

பெண்ணே நீ ஏன்
இப்படி ஏமாறுகிறாய்,
ஏமாற்றுகிறாய்.
ஏனிப்படி என்னையும்
பொய் சொல்ல
வைத்துப் பொய்யன்
ஆக்குகி|றாய்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (13-Oct-15, 2:33 pm)
பார்வை : 129

மேலே