வானத்தின் கீழ் கவிதை

*
கோடைவெயிலில் மோர் விற்பவள்
தெருவில் தாகத்தோடு அலைகின்றாள்
புங்கம்இலைகள் போர்த்திய கூடையில்
நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள்
மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள்
கூடை தலையில் சுமந்து பூ விற்பவள்
சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள்
விசிறி விற்பவன் வியர்வை வழிய
பாதையில் கூவி திரிகின்றான்
குடை பழுது பார்ப்பவன் மழையில்போது
நனைந்து வீதியில் நடக்கின்றான்
உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை
தள்ளிக் களைத்து அலைகின்றான்
பொறி கடலை பட்டாணி சுண்டல்
சூடாக வறுத்து கொடுப்பவன்
வான்மேகத்தைப் பார்த்து நிற்கின்றான்
அசலைத் தேற்றி எடுக்க முடியாமல்
மனமோ எந்நேரம் அலைபாய்கிறது
கடனும் வட்டியும் கட்டியது போக
கையில் போக மிஞ்சுவதென்ன? என்று
கணக்கு பார்த்து மனம் துவள்கிறது
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Oct-15, 9:30 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 119

மேலே