வெள்ளை அறிக்கை

சாமி இருக்குதா இல்லையா
சர்க்காரு சட்டம் ஒன்னு போடவேணும்
தாசில் மணியாரர் ஊர் ஊரா - அதை
தண்டூரா போட வேணும்

பேயாம் பூதமாம் கேட்டை காட்டேரி
கொள்ளி வாய்ப் பிசாசாம் - சனங்க
கழிச்சல் எடுக்கறாங்க - ஒரு
வெள்ளை அறிக்கை விட்டு - நடு
வீதியிலே ஒட்ட வேணும்

மட்டு மட்டுன்னு மண்டையிலே
தேங்காய் உடைக்கிறாங்க
கடைவாயில் கம்பி ஓட்டி
கண்ணிரண்டும் பிதுங்கறாங்க
குத்திச் சதை கிழிய கொக்கியிலே தொங்குறாங்க
காத்து கறுப்பாம் ஓட்டி முறியடிக்க
உடுக்கை ஓசையிலே உர்கார்ந்து ஆடுறாங்க
நூறு ஆயிரமா எட்டோடக் கூட்டி
குடம் குடமா பாலைக் கொட்டிக் களைக்கிறாங்க
கழுதைக்குத் திருமணமாம்
காவலுடன் ஊர்வலமாம் - இதற்கு
வகை வகையாய் விருதுகளை
சர்க்காரு வாரி வழங்க வேணும்

வசியம் மாந்திரீகம் பில்லி சூனியமாம்
ஏந்திரத் தாயத்து மந்திரிச்சக் கயிறாம்
குள்ளநரிக் கொம்பாம் கொல்லிமலை மையாம்
கூவிக் கூறுகட்டிக் காசைக் கொள்ளை அடிக்கிறாங்க - அதை
வில்லியில்லாத் திட்டத்திலே வீடு வீடா கொடுக்க வேணும்

இல்லையின்னுச் சொன்னவனை
கண்ணைக் கெடுக்குதாம் கடநாசம் பண்ணுதாம்
எதற்கும் இருக்குதுன்னே சட்டம் வேணும்
நம்மைச் சந்ததிகள் போற்ற வேணும்

நரியனுர் ரங்கு செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (14-Oct-15, 5:47 pm)
பார்வை : 67

மேலே