கொஞ்சம் மழை பெய்தால் பரவாயில்லை

என் மேல் பட்டுத்தெறிக்கும்
வெயில்,
என் மனதையும்
உன் நினைவுகளையும்
வதைப்பதால்
கொஞ்சம் மழை பெய்தால்
பரவாயில்லை என
நினைக்கிறது மனது,

நீ ,
உன்னையும்
உன் நினைவுகளையும்
மழை தோய்த்தே
நினைக்கப் பழக்கிவிட்டாய்
என்னை..

வடாம் காய வைக்க
அம்மா
மாடிக்கு வருவதற்குள்
வந்து போகுமா
உன்னை இதமாய் நினைக்க
அம் மழை?

முன்னொரு மழையில்
நான் தனியாக நின்ற போதும்...
உன்னோடு நிற்பதாகவே
நினைத்துக் கொண்டாள்
அம்மா...!

எழுதியவர் : புதிய கோடங்கி (14-Oct-15, 4:46 pm)
பார்வை : 76

மேலே