காலம் கடந்து நன்றி
காலங்கள் பல கடந்து போயின
உன் ஞாபகங்கள் மட்டும் என் நெஞ்சிலேயே தங்கின
நிலைக்கண்ணாடியை பார்த்துஇன்றோடு ஐந்துஆண்டுகள்
ஆயிரம் ஆண்டுகள் போனாலும் அழியாத உன் ஞாபகங்கள்
ஆயிரக்கணக்கில் ஆண்களும்,பெண்களும் கலக்கும் ஓர் திருவாரூர் தேர் திருவிழா
அதுமட்டும் அல்ல
என் தேவதையை சந்திந்த பெருவிழா
எதார்த்த நொடிகளில் ஈட்டி பாய்ந்த சில நிமிடங்கள்
வார்த்தைக்கு பஞ்சம் வந்த பல நிமிடங்கள்
கண் பார்த்தால் கை செய்வதுபோல்
இந்த பெண் பார்த்ததால் கால் நடந்தது
ஒரு சில நிமிடத்தில்
என் மெய் நினைவுக்கு வந்தது
அந்த சிறிய இடைவெளியில் காணமல் போன உன்னைக் கண்டுபிடிக்க உதவிய
உன் கால் கொலுசுக்கு நன்றி