மரம் வளர்ப்போம்
பத்தடிக்கு பள்ளம் வெட்டி
பாங்காய் மரங்கள் வைத்தனர்
பத்திரமாய் பாதுகாக்க
வலையும் சுற்றி வைத்தனர்
பத்தில் ஒன்று பிழைத்தாலும்
பயனுறும் எதிர்காலம்
நம் சுற்றியுள்ள கன்றுகளை
தத்தெடுத்துக் கொள்ளுவோம்
நாளை உலகம் செழிக்க
நல்ல மரங்கள் வளர்ப்போம்
-------
ஆனால் வெட்டுபட்ட பெரிய மரம்
என்ன பாவம் செய்தது....?
--- முரளி
--------------------------------------------------------
குறிப்பு:
1. படத்தில் வெள்ளைச் சாயம் பூசிக்கொண்டிருக்கும் வெட்டப்பட்ட மரத்தின் பெரிய அடிப் பாகம் காண்க..
2. சென்னை மாநகராட்சி எங்கள் பகுதியில் பத்தடிக்கு ஒரு மரக்கன்று நட்டுள்ளனர்.... சுற்றி வேலி அமைத்துள்ளனர்....