மெல்லச் சென்று மறைந்ததே

கொட்டுச் சத்தம் வானில் கேட்டுக்
***கோலத் திங்கள் பயந்ததோ ?
எட்டிப் பார்த்து மின்னல் பூக்க
***ஏத்திச் செவ்வாய் மலர்ந்ததோ ?
சொட்டு மாரி போட்ட தாலே
***சொக்கி மேனி சிலிர்த்ததோ ?
விட்ட பின்னர் மீண்டும் தோன்ற
***மெல்லச் சென்று மறைந்ததே ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Oct-15, 12:37 pm)
பார்வை : 107

மேலே