மூவர்ணக் குறும்பு பாக்கள்
மூவர்ணக் குறும்பு பாக்கள்
==========================================ருத்ரா
தலைநகரில் அணிவகுப்பு.
முப்பது லட்சம் பேர் திரண்டிருக்கலாம்.
ஆனால்
இருபத்தொன்பது லட்சத்து தொண்ணூத்தொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூத்தெட்டு பேர்கள்
செக்யூரிடிக்கு.
யார் அந்த இரண்டு பேர்?
ஒபாமாவும் மோடியும் தான்.
________________________________________________
வெயிலில் நின்றாலும் கூட
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு
நிழலே விழுவதில்லையாம்.
அவர் நிழல் கூட
இப்போது பா.ஜ.கா வில்.
_______________________________________________
நம் நாட்டு
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கூட
கடன் தருகிறதாமே சுவிஸ்பேங்க்.
நமக்கு அன்னியோன்யமாகி விட்ட
ஒரே உலக பாங்கு இதுவே.
_______________________________________________
வெள்ளை மாளிகையும்
அசோக சக்கரமும்
பூச்செண்டுகள் பரிமாறிக்கொண்டன.
ஆனால்
டாலரின் நண்டுப்பிடியில்
முழி பிதுங்குவது
நம் ரூபாயே தான்.
"ஸாரே ஜஹாம் ஸே அச்சா..."
___________________________________________________
ராம் ராம் என்று
கோவில் கட்ட கிளம்பிவிட்டார்கள்.
"ராம நாம சங்கீர்த்தனம்..."
எல்லா இடங்களிலிருந்தும்
இப்போது வரும் செங்கல்கள்
நாது "ராம்"கோட்சேக்கு.
______________________________________________________
இவர்கள்
நிச்சயமாக சமஸ்கிருதத்தை
தேசிய மொழியாக்கி விடுவார்கள்.
பாவம்!
அதன் உள்ளே இருப்பது
தமிழ் என்று தெரிந்துகொள்ளாத வரை.
___________________________________________________
தனுஷும் அமிதாப்பும்
அர்த்தநாரிஸ்வர் ஆகிவிட்டார்களே.
குத்தாட்ட சேனை வீரர்கலே!
இந்தி எதிர்ப்பு எல்லாம்
இனி வேண்டாம்..
போய் கட் அவுட் கட்டுகிற
வேலையைப்பாருங்கள்.
_____________________________________________________
அங்கே ஒரு கொலை விழப்போகிறது
என்று
அருகம்புல்லுக்கும் தெரிந்திருக்கிறது.
ஜனநாயக ரோஜாக்களே
மொட்டாக வரும்போதே
கருகிப்போய் விடுங்கள்.
இப்போதைய
புனித
ஜனநாயகக்கடமை அது மட்டுமே!
திருவரங்கம்.
_______________________________________________________
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது.
எது நடந்துகொண்டிருக்கிறதோ
அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.
பகவத் கீதையா அது?
அல்ல அல்ல.
"பெங்களூரு"க் கீதை!
_______________________________________________________
சமணர்கள் கழுவேற்றப்படுவது
இன்றும் நடைபெறுகிறதோ?
இந்திய தொன்மை இங்கே
கழுத்தறு பட்டு கிடக்கிறது.
மதுரையில்
கிரானைட் குவாரி.
________________________________________________________
மோடியின் தலைப்பாகை
மிக அருமை.
டெல்லியின்
விரல் தட்டும் பொறிகள்
அதைத்தான் கட்டிக்கொள்ள
தயார் ஆகின்றன.
__________________________________________________________
தேசியமயமாக்க
இதோ மிச்சமிருக்கிறது
சாதிமதங்களின் ஒரு தொழில்.
"எழுத்துக்களோடு ஒரு கட்டப்பஞ்சாயத்து"

