இது என் பணியாற்றலின் ரகசியம்
*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.