கண்ணீர்

உடம்பிலுள்ள அத்தனை நீரும் குறைந்து போனாலும்
உதிரமே சுண்டி போனாலும் உள்ளம் கரைக்கும்
கண்ணீர் மட்டும் குறைவதே இல்லை

என்ன வியப்பு கடவுளின் படைப்பு
சிரிப்பு கூட சில நிமிடம்தான்
அழுகைக்கு அளவே இல்லை

எப்பொழுதாயினும் தேவைப்படுமே அதனால்
மெய்யது முழுக்க நிரப்பி வைத்தானோ !

கண்ணீர் கேவலம் அல்ல
நண்பனே நீ நிறைய அழு
மற்றவர் இரக்கப்படும் வரை அல்ல
உன்னுடைய சுமை இறங்கும் வரை !

எழுதியவர் : (16-Oct-15, 12:01 pm)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : kanneer
பார்வை : 91

மேலே