உன் பார்வை
இருவிழி பார்வை
ஒருவழியாய் சங்கமித்த வேளையில்
நா ஊமையானது-
செவி செவிடானது-
கால்கள் முடமானது ..
அவன்-அவளை
நெருங்கினான் ..
மூச்சு காற்று நுழைய
மட்டுமே இடைவெளி ..
அருகாமை தந்த
மயக்கத்தில் -
கிரக்கம்தனை சுமந்து
தன்னிலை மறந்தாள் - அவள் ..
வட்ட நிலவினை
வாட்டமாய் பிடித்து ,
முகவாய்தனை
இரு கைகளால் ஏந்தி ,
வெட்டிவைத்த இரு
ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை
தன் இதழால் சுவைத்து ,
மூச்சு முட்ட அணைத்தான் -அவன் ..
தன்னிலை உணர்ந்து
வெட்கம் பிடுங்கித் திண்ண
கன்னத்தில் செம்மை
குடியேற..
கண்மலர்த்தினால் - அவள் ..
ஆச்சர்யம்...!!!
நடந்தவையெல்லாம் அவன்
இருவிழி பார்வையால் ..!