சுகமாய்

கண்களில் உறக்கம் வர
கலைகளின் மடி கிடந்தேன்
பல்லவன் சிலை வந்து
படுக்கையில் தள்ளி கொண்டு
கனவினை செதுக்க சொல்லி
கண் இமை உளிகொண்டு
பாதம் தொடும் கடற்கரையில்
பால் நிலவொளி மணல்வெளியில்
புரண்டு புரண்டு இரசித்திருக்க
போர்வையாகும் குளிர் சுகமாய்
கிழக்கு வந்து எழுப்பினாலும்
கிடத்திடுமாம் குகை மடியில்
கனவுகளில் வாழ்க்கையென்றால்
கலைகளிலே கண்களென்று
இமைமூடி எத்தனித்தேன்
இவ்வாழ்வில் பார்ப்பது இனிமை



எழுதியவர் : . ' .கவி (3-Jun-11, 9:55 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : sugamai
பார்வை : 387

மேலே