ஒசாமாவும் ஒபாமா ஆவான்


இன்றைய தலைமுறைக்கு தாலாட்டு பாடவும் தெரியவில்லை ..... நல்லதை பாராட்டி பேச தெரிந்தும் பாராட்டுவதுமில்லை

பாராட்டி பார் .... ஒருவன் நல்லது செய்வானோ
இல்லையோ ...தீமை செய்ய தயங்குவான் ...

பாராட்டி பார் .... ஒரு வட்டத்தில் வாழும் ஒருவன் தன் விட்டத்தை விஸ்தரிப்பன்...

திறமையை கண்டறிந்து
பாராட்டி பார் .....டாஸ்மார்க் குடிகாரனும் லேண்ட்மார்க் பணகாரனவன்


நல்லதை தேர்ந்தெடுத்து ...
பாராட்டி பார் .....ஒசாமாவும் ஒபாமா ஆவான்

குறையினை மறந்து , நிறைவினை
பாராட்டி பார் .... கல் நெஞ்சகாரனும் கர்ணனாய் மாறுவான்


பாராட்ட ஏன் தயக்கம் ........

பிறரை நிறைவை பாராட்டு ....எதற்கு இந்த வெட்டி வேலை என உனக்கே தோன்றும்

முடிந்தவரை பாராட்டு ...ஏனென்றால்

நல்லதையே பார்த்து பார்த்து
நல்லதையே பாராட்டி பழகி
நீ நல்லவனாகவே மாறிப்போவாய்

நல்லவனை மாறி என்ன பயன் என தோன்றும்
- எப்படி எல்லாம் தோன்றுகிறது பார் -

இருந்தாலும் சொல்கிறேன்

நல்லவனை மாறினால்...

நிறைவான செல்வம் இல்லாமல் போகலாம் ..
மன நிறைவான வாழ்வு அமையும்
அதிகாரம் இல்லாமல் போகலாம்
அமைதி என்றும் உன் அருகில் இருக்கும்

ஒரு நாள் உலகம் பாராட்டும் ... உன் அறிவை அல்ல , புகழ் , பொருளை அல்ல ....

பிறர் நிறைவையே பார்த்து பாராட்டி பழகிப்போன உந்தன் நிலைத்து போன நிறைவான குணத்தை பார்த்து ...

உலகம் நேர்மறையாய் பேசினால் கொஞ்சம் வெறித்து பார்க்கும் ......பார்த்துவிட்டு போகட்டும் மாறிவிடதே!!!!!!

நீ நீயாக இரு .....

அவனையும் அவனாக இருக்க விடு ...

முடிந்தால் சிறந்த அவனை அவனுக்கு அடியாளம் காட்டு ..

அவனை ...சிறந்தவனாக மாற்றிய பாராட்டு உன்னை சேரும்




எழுதியவர் : சர்வா (3-Jun-11, 11:20 am)
சேர்த்தது : sarvakumar
பார்வை : 404

மேலே