முத்த பரிமாற்றம்
இரவில் காயும் வெண்ணிலா
இமை மூடும் நாணத்தால்
மேகத்தில் மறையும்
மெல்ல இருள் சூழும்
பூக்களெல்லாம் இதழ் மூடி தலை சாயும்
மின்மினி பூச்சிகள் கூட தன் விளக்கணைக்கும்
என்னவள் வெளிச்சம் கண்டால்
வெட்கி தலை குனிவாள் என
அனைத்தும் தன் சுயம் இழந்தன
அவள் இதழ் முத்த பரிமாற்றம் முடிப்பதற்கு !