என் காதல் தேவதை
மஞ்சள் வெயில் மங்கை அவள் மீது பாய
மின்னல் அது வெட்கி தூரம் ஓட
சோலைக் கொண்ட மலர்கள் கூட
தம் இதழ்கள் திறக்க மறக்க
என் தேவதையின் பேரழிலில் இழந்த
என்னை மீளச் செய்வார் யாரோ?
காற்று வந்து என்னிடம் காதல் பேசி மீட்க
அந்த காதல் சொல்ல அவள் அருகில்
நானும் மெல்ல செல்ல, அவள்
கண்கள் இரண்டும் பேசிய கதைகள் ஓராயிரம்
அதை காணும் போது பேச ஏது நேரம்?
என் காதல் தேவதை என்னருகில் வந்த நேரம்
பல லட்ச மின்னல் நெஞ்சில் பாய
மீண்டும் ஒரு முறை பிறந்து
வந்தேன் என் கண்மணியைச் சேர.