தமிழனின் வீரத்தை உலகுக்கு காட்டினோம்

நீங்கள் பேனா ஏந்திய நேரம்
நாங்கள் ஆயுதம் ஏந்தி களம் சென்றோம்
நீங்கள் தாயின் முந்தானைக்குள் உறங்கிய நேரத்தில்
நாங்கள் எதிரியுடன் ரணகளத்தில்

நீங்கள் காதல் கடிதம் எழுதிய போது
நாங்கள் வெடியாய் வெடிப்பதற்கு
தலைவனின் அனுமதிக்காக வேண்டினோம்

நீங்கள் புத்தாடை அணிந்து
புதினங்கள் பார்க்கும் போது
நாங்கள் தமிழனின் வீரத்தை
உலகுக்கு காட்டினோம்

நீங்கள் தங்க ஆபரணங்கள்
அணிந்த போது
நாங்கள் நஞ்சு மாலை அணிந்தோம்
நீங்கள் யாருக்கு என்ன நடந்தாலும்
நமக்கென்னன்றிருந்த போது
நாங்கள் எம் இனத்தை சீண்டிய பகைவனின்
குடியிருப்புக்களை தீமூட்டினோம்

நீங்கள் உங்கள் இளமையை
அனுவவித்த போது
நாங்கள் எங்கள் இனத்துக்காக
இளமையை செலவழித்தோம்

நீங்கள் ஒன்று படாது சுயநலமாக
வாழ்கின்ற போது
நாங்கள் புலம் பெயர்ந்த தமிழனாய்
ஈழம் கேட்டு போராடுகின்றோம்.

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (17-Oct-15, 4:14 pm)
பார்வை : 150

மேலே