கணனி காதல்

பேய் என்றும் பூதம் என்றும்
பூச்சாண்டி பயம் எல்லாம்
புரியாத மொழியான
கனவுலக இரவு
கணனி யுகம்!

காசிருக்க கவர்ந்திளுக்கும்
வயதிருக்க வாய்ப்பு தேடும்
புதிய அனுபவங்கள்
புலகாங்கித ஆசைகள்!

அறியாத வயதின் அடங்காத ஆர்வங்கள்! ஆசைகள்!
புரியாத பூஜ்யமாய்
பருவத்தின் புதிரான பக்கங்கள்!

கால்காசு வேலைக்காய் காத்திருந்த காலம் போய்!
கல்லூரி முடிய கைமேல் வேலையாய்
காசு நிறை மகிழ்வுச் சோலையாய்!

காலம் போக ஞானம் பிறக்கும்
பொறுப்பு எனும் கவலையால் கிடந்து தவிக்கும்!!!!

எழுதியவர் : கானல் நீர் (17-Oct-15, 6:57 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே