காதலுக்கு தான் கண்ணில்லையோ

உன்
இமைகளில்
எப்படி இறக்கைகள்?

கண்கண்ட கணத்தில்
என் கண்கள் மூர்ச்சை!

சுற்றும் மறந்து போக
உன் விழியசைவு எல்லாம்
எனக்கு
பிரெய்லி எழுத்துக்கள்...

ஓ?
காதலுக்கு தான் கண்ணில்லையோ?

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 8:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 185

மேலே