தமிழ்மொழி வாழ்த்து அகவல்
தமிழ்மொழி வாழ்த்து அகவல்
என்னுள் நிறைந்த எழில்மொழி வாழி
இன்னிசை உறையும் இன்மொழி வாழி
கன்னற் சுவைகொள் கவின்தமிழ் வாழி
இன்னுஞ் சொல்வேன் என்தமிழ் வாழி
முதுசிவன் தந்தவென் முத்தமிழ் வாழி
புதுமைகள் படைத்துப் புவியினில் வாழி
முதுமை இலாதநல் முளரியாய் வாழி
பொதுமை மொழியாய்ப் புகழுடன் வாழியே
கன்னல் - கரும்பு
முளரி - தாமரை
வகை : அடிமறிமண்டில ஆசிரியப்பா
ஞா.நிறோஷ்
அரவிந்தப் பாக்கள்
2015.10.17