காதல்

1. ஏனோ நீ பேசும்
எல்லா வார்த்தைகளும்
என் பெயராய் கேட்பதால் தான்
உன்னையே பார்க்கிறேன்..
நீயோ உன்னையே பார்க்கும் என்னை...
வியப்பாக பார்க்கிறாய்...

2. தொட்டுப் பார்க்கும் ஆசையில்
உன்னை ஒட்டிப் போன தென்றலும்
உன்னை கடக்க முடியாமல்
அங்கேயே நின்று விட்டதாம்!!
சுவாசிக்க முடியாத மலர் ஒன்று
என்னிடம் சொல்லி விட்டு மரித்தது...
தென்றலுக்கே நீ மயக்கம் தந்தால்
என்னை நினைத்து பார்...

3. ஒவ்வொரு மலரையும்
வருடிப் போகும்
பூந்தென்றல் நீ...
அதனால் தான்
எந்த பூவையும்
லயித்துப் பார்க்கிறாய்..
உன் தீண்டலுகாக்
காத்திருக்கும் ஒற்றை மலர் நான்..
எனவே தான்
உன்னை விட்டு என் கவனம் அகல வில்லை...

4. அடியேய் என நீ
அழைக்கும் போதெல்லாம்..
அலைகடல் கூட நின்று ரசிக்கிறது
நீ கூப்பிடும் அழகை!!

5. வானும் மேகமும்
விளையாடும் போது
சிந்தும் மழைத்துளி போல் தான்
என்னை நீ சீண்டும் போது
வெளிவரும் உன் புன்னகை..

6. உன் இதழ் அழகா
உன் குரல் அழகா
என கேள்வி எழும் என்னுள்
அப்பொழுதெல்லாம் நீ
என்னை அழைத்தோ இல்லை
இழுத்தோ என் வினாவிற்கு
பதில் சொல்கிறாய்...
அனாலும் சந்தேகம்
தீரவில்லை எனக்கு...
விடைக்கு ஆசைப் பட்டு
வெட்கப்பட்டு நிற்க்கிறேன் நான்!!

7. உன்னைப் போல்
ஆண்கள் உள்ளவரை
எப்படி
பெண்கள் பேராசை
இல்லாமல் இருப்பது??
நூறு வார்த்தை நீ
பேசிய பின்னும் உன்
அடுத்த வார்த்தைக்கு காத்திருக்கும் என்னை போல்...

8. அங்கும் இங்கும்
அலையும் உன் கண்ணுக்குள்
என்னை பார்த்து விட்டால்
கும்மளமிடுகிறது என் மனம்
உனக்குள் என்னைக் கண்ட குதூகலத்தில்!!

9. உன்னோடு பேசிக் கொண்டும்
உனக்காக காத்திருந்துமே
வாழும் வாழ்க்கை தான்
எனக்கு கிடைத்த
மிகச் சிறந்த பரிசு!!

10. குட்டி ஒரு நிமிஷம்
என்று நீ சொன்னால்
விட்டு போகும் உயிர் கூட
உனக்காக காத்திருக்கும்!!


எழுதியவர் : அன்புமலர் (3-Jun-11, 2:10 pm)
சேர்த்தது : Malarvizhi Anbuvel
Tanglish : kaadhal
பார்வை : 356

மேலே