திருந்திய டாஸ்மாக்கன்
-------------------------------------------
உழைத்துச் சம்பாதித்த பணத்தில்
பாதியை டாஸ்மாக்கில் கொட்டி
போதைய ஏற்றிக் குடியைக் கெடுத்தவன்.
விபத்தொன்றில் திருந்தி இனிமேல்
குடிப்பதில்லையென்று சத்தியம் செய்தேன்
மனைவியின் காலைப் பிடித்து.
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற
மூதுரையைப் பொய்யாக்கி
குடியைத் தொலைத்து தலைமுழுகியவன்.
பல ஆண்டுகள் குடித்தவன் திருந்தினாலும்
டாஸ்மாக் காட்சி நினைவுகள்
மனதில் பதிந்து படம் போல் ஓடுவதால்
மாலை நேராம் ஆனால்
டாஸ்மாக் ஒன்றின் முன்
கொஞ்ச நேரம் நின்று
அங்கு குடிமக்கள் நடத்தும் காட்சிகளைக்
கண்ணெரியக் கண்டு ரசிப்பேன்.
இந்த மானங்கெட்ட காட்சிகளை
நானும் அரங்கேற்றியவன் தானே!
என்னையே நான் காறித்துப்பிக்கொண்டு
வீடு திரும்புவேன்.
டாஸ்மாக் வாடிக்கையாளனாய் வாழ்ந்தவன்
இன்று டாஸ்மாக் ரசிகனாய் மாறி
தினம் அங்கு வந்து
கொஞ்சநேரம் நின்று
குடிக்கும் நம் குடிமக்கள் எல்லாம் திருந்தி
டாஸ்மாக்கை இழுத்து மூடும் நன்னாளை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
------------------------
I am a teetotalleர்
-------------------------’டாஸ்மக் ரசிகன்’ என்ற பெயரில் பதிவு செய்ததை விலக்கி பெயர் மாற்றம் செய்து மீண்டும் பதிவேற்றியுள்ளேன். அதே பெயரில் நகைச்சுவையிலும் ஒரு பதிவு இருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்கவே பெயர் மாற்றம் செய்தேன்.
*இது நான் உருவாக்கிய சொல். (பதிவு எண்: 266304)
• நகைச்சுவைப் பகுதியில் இதைப் பதிவு செய்திருக்கிறேன். இதைப் படித்துவிட்டு ‘டாஸ்மாக்கன்’ என்ற சொல்லிற்கு கல்பனா பாரதி அவர்கள் அருமையான விளக்கம் தருகிறார்:
KalpanaBharathi :
டாஸ்மா என்று சொல்லலாம் . மா என்றால் மிருகம் என்று பொருள்
பன்மையில் டாச்மாக்கள் . அப்படிப் பார்க்கும்போது டாஸ்மாக்கன் ஒருமை . டாஸ்மாக்கள்---பன்மை . உங்கள் பெயரீடு சரியே .
இந்த மாக்களுக்கு தண்ணி வார்க்கும் மா கொட்டில் மதுக் கடைகள் .
இந்த மாக்கள் காசு கொடுத்துத்தான் தண்ணி குடிக்குது இல்லை தண்ணி அடிக்குது. இந்தக் கொட்டில்களை வளர்ப்பது நமது மாண்புமிகு மனித வள அரசுகள் . அடுத்து வரும் தேர்தல் இம் மா கொட்டிலின் தலைவிதியை தீர்மானிக்கும். கொசுறு :
மகாராஷ்ட்ராவில் 10 ஆண்டுகளாக ஒழிக்கப் பட்டிருந்த டான்ஸ் பாருக்கு
(DANCE BAR ) உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது . மகா அரசு எதிர்த்து முறையீடு செய்யப் போகிறது. மதுவுடன் மது மங்கையர் ஆட்ட போதை அகம் பற்றி இங்கே சிலர் சிந்திக்கக் கூடும்.
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் ...எங்கள் உலகம் .....ஆங் ...
•