ஏமாறுவது எங்கள் பிறப்புரிமை

சொல்லும் விதத்தில் சொல்லி
ஏமாற்றும் விதத்தில் ஏமாற்றினால்

எதையும் மனதார ஏற்று
வீண் செலவையும்
உயிருக்கு இணையான
நேரத்தையும் வீணடிக்க

காத்துக் கிடக்கும்
ஏமாளிகளின் எண்ணிக்கை
கணக்கில் அடங்காது.

மாற்றமில்லா மாற்றமிது;
ஏமாற்றுக்காரர்களுக்கு
உதித்து எழும்
கொழுத்த லாபம் தரும்
புதுப்புது சிந்தனைகள்

வாழ்க ஏமாற்றுக்காரர்கள்
வளர்க ஏமாறக்காத்திருப்போர்

எழுதியவர் : மலர் (20-Oct-15, 8:07 pm)
பார்வை : 81

மேலே