எம் பொண்ணுப் பேரு உடான்

என்னய்யா உம் மனைவியை பிரசவத்திற்கு மருத்துமனையிலே சேத்துட்டு வந்தயே கொழந்த பொறந்திருச்சா?

ம்.. பொறந்திருச்சு அண்ணே. அழகான பெண் கொழந்த.

சரி அதுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

அண்ணே என் மனைவி ஒரு தொலைக் காட்சித் தொடர் பைத்தியம். ஒரு நாளைக்கு 10 அல்லது 15 தொடர்களப் பாப்பா. அதிலே இந்தித் தொடர்களும் அடக்கம். நா கொழந்தைக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்கலாம்னு இருந்தேன். அவ தான் "தமிழ்ப் பேரப் பிள்ளைங்களுக்கு வைக்கற காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இந்திப் பேர வைக்கறது தான் நாகரிகம் சொல்லிட்டு அவளே ஒரு இந்திப் பேர வைக்கிறன்னு அடம் பிடிச்சா.

சரி என்ன பேரு வச்சாங்க?

அண்ணே அவ உடான்-ன்னு ஒரு இந்தித் தொடர் பாக்கறவ. அந்தத் தொடர் துணிச்சலான ஒரு சிறுமியின் கதை. அந்தச் சிறுமி மாதிரி எங்க பொண்ணும் இருக்கணுமாம். அதனால எங்க பொண்ணுக்கு உடான்-ன்னு பேரு வச்சுட்டா?

சரி அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்ன்னாவது தெரியுமா?

இந்தித் தொடர் பாக்கற எம் மனைவிக்கே உடான்ன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியாது. எனக்கு எப்படி அண்ணே அதுக்கு அர்த்தம் தெரியும்?


சரி, நாஞ் சொல்லறேன். உடான்-ன்னா பறத்தல் -ன்னு அர்த்தம்.

அடிப் பாவி தமிழ்ல பேருக்கு ஏதோ பஞ்சம் ஆன மாதிரி பறத்தல்ங்கற இந்திச் சொல்ல எம் பொண்ணுக்கு பேரா வச்சுத் தொலச்சிட்டாளே.

எழுதியவர் : மலர் (21-Oct-15, 12:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 45

சிறந்த நகைச்சுவைகள்

மேலே