வாழ்வின் எல்லைவரை நீ வேண்டும்
உன் மார்புத்தலையணையில் தொடங்கிய என் தூக்கம்
நம் போர்வைக்குள் முடிய வேண்டும்.. விடிய வேண்டும்..
உன் கூந்தலை அள்ளி என் மேல் வீச
என் காலைத்தூக்கம் களைய வேண்டும்..
உன் இதழ் முத்தத்தில் என் காலைப்பசி தீர வேண்டும்..
வேலைக்கு வழியனுப்ப வாசல் வரை வந்து
நெற்றி முத்தம் தர வேண்டும்...
புன்சிரிப்பில் வழியனுப்ப
புதுயுகம் நான் பெற வேண்டும்.. அந்நாள் இனியதாக வேண்டும்..
சோர்வாக நான் வரும்போது
வீட்டு முன்னறை ஆசனத்தில்
என் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்து
அமர்ந்திருக்க வேண்டும்..
வாழ்வின் எல்லைவரை நீ வேண்டும்
இறுதிவரை இப்படி இருக்க வேண்டும்
கடைசித்தருணம் உன் மடியாக இருக்க வேண்டும்