உறவுகள் பிரிந்திடும் ஒருநாள்

விட்டுக்கொடுக்கும் நட்பு
நம்மை விட்டுப்போகும்போது
மனம் நிறைய வலி இருக்கும்
பகல் இரவும் அது தவிக்கும்
கிடைத்திடும் உறவுகள்
நிலைத்திடும் வகையில்
வரமொன்று கேட்டால்
இறைவனும் சொன்னான்
தவமொன்று செய்து
தலைக்கீழாய் நின்று
நிலைத்திடும் உறவுகள் தேடி
பிரபஞ்சத்தின் மறுபுறம் ஓடி
பலமுறை அலைந்தேன்
அதுபோல் உறவில்லை அறிந்தேன்
வகை நூறு வரம் தரும்
என்னிடம் தொலையாத
உறவுகள் நீ கேட்க
அதுபோல் உறவுகள் எனக்காக
எவரிடம் நான் கேட்க???

எழுதியவர் : நிரஞ்சன் (21-Oct-15, 5:16 pm)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
பார்வை : 78

மேலே