புரண்டோடும் கண்ணீர் - உதயா

வெகு தொலைவில்
ஏதோ ஓர் சத்தம் மட்டும்
ஒவ்வொரு நாளின்
நடு இரவு வரை
வீதியெங்கும் பயணிக்கிறது

மிக இலகுவாக
மதில் சுவரின் வாயிலை கடந்து
கொஞ்சம் சிரமம் பட்டே
வீட்டின் வாயிலை கடந்த

அந்த சத்தம்
நிச்சயம் கேட்டிருக்காது
தொலைக்காட்சி ஒலியினையும்
ரேடியோ ஒலியினையும் கடந்து
அனைவரின் காதிற்கும்

கேட்காமல் போனது
அந்த சத்தம் மட்டும் தானா
அருகில் அழுதிருந்த
அவரின் குழந்தை
சத்தமும்தான்

குப்பை தொட்டியில்
அதிகரித்திருந்த குப்பைகளோடு
புதிதாய் வந்து சேர்ந்த குப்பை
பலருக்கு குப்பை தொட்டியை
அடையாளம் காட்டியது

பாவம் புதிய குப்பை
இன்னும் ஆறடியில் குழியில்
விழவேண்டிய நிறைய குப்பைகள்
நாட்டில் உள்ளதென அதற்கு
தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை

நாட்டில்
மிச்சமிருந்த இரக்கங்கள்
வாழ வழியில்லாதோரிடத்தில்
தஞ்சம் புகுந்திருந்தது

எங்கிருந்தோ வருகிற சத்தம்
தெருவில் புரண்டோடிய
மழலையின் கண்ணீரை மட்டும்
மெதுவாக குறைக்கிறது

ஆனால் அந்த மெத்தையில்
புரண்டோடும் மழலையின்
கண்ணீரை குறைப்பது

பெரும்பாலும்
ஏதோ ஓர் திரைப்பட
பாடலின்றி

நிச்சயம்
பெற்றவரின்
அரவனைப்பில்லை

எழுதியவர் : உதயா (22-Oct-15, 2:45 pm)
பார்வை : 87

மேலே