நான் பார்த்த காற்று
நேற்று வரை நான் உனக்கு காதலனாய் இல்லாவிடினும்
நீ மட்டும் தான் எனக்கு காதலியாய் என்றும்.
நாளை யாருக்கோ திருமதியாக போகும் என் வான் மதியே..
ஒரு வேளை உனக்கு தெரிந்து இருக்கலாம்
நான் கடைசிவரை சுவாசிப்பது
உன்னை தான் என்று.
ஆறுதலாய் உன் வீட்டை கடக்கும் நான்,
இனி எப்படி நடப்பேன் அந்த வெறுமையான நரக தெருவில்..
பூத்து பல ஆண்டுகள் ஆகியும் நீ சூடாத மலர்
நாளை என் கல்லறையில் வைக்கபடலாம்.
அடுத்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கு
உன் அதிர்ஷ்டசாலியுடன் வரும் நீ
உன்னையே தேடும் என்னைத் தேட வேண்டாம்.
நான் இப்போது போலவே அப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பேன்
உனக்கும் தெரியாமல் காற்றில் ஒரு தலை காதலுடன்.
..மஞ்சள் நிலா 🌙
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
