பேச்சளர்

கொசுக்கடி தாங்கல; நெருக்கடி வீட்டுல…
அடிக்கடி படுக்கையில் புரண்டுதான் படுக்கிறேன்…!
அரைப்படி அரிசியில அரைவயிறு நெரப்பவே
அடுப்படியில் பாத்திரத்தை அடிக்கடி உருட்டுறேன்..!

பேச்சலரு லைப்புங்க பஞ்சர்போன டயருங்க
ஹவுசு கொடுப்பதற்கு யோசிக்கிறாங்க ஓனர்ஸ்ங்க
ஆஞ்சநேயர் பக்தனா பாய்சுங்க இருந்தாலும்
உசுப்பிவிட்டு கலாய்க்கிறாங்க டீனேஜி கேர்ள்ஸ்ங்க

பெத்தவங்க படிக்கவச்சி பட்டணம் அனுப்புனா
மத்தவங்க மப்புயேத்த துட்டுசெலவு பண்ணுறான்
மத்தாப்பு கொளுத்தும் தினத்தில் மப்சுல் பஸ்டாண்டில்
புத்தாடை பேக்கோடு டிக்கெட் ஃகியுவில் நிக்கிறான்

பொங்களுக்கு ரெண்டுநாள் முன்னாடியே வந்துடென-ஒரு
திங்களுக்கு முன்னமே வேண்டுகோள் விடுவாங்க..!
எங்களோட பொழப்பு நீங்க நெனக்கும்படி கிடையாது
திமிங்கலம் வாயிக்குள்ள சிக்கியது திரும்பாது...!

ஊரோடு வாழ்வதுதான் உசந்தப் பொழப்பு
ஊருவிட்டு ஊருப்போனா நாறுது பொழப்பு
வெளியூரூ காரனென்ற முத்திரை சுமந்து
தகராறு வந்துவிட்டா முகத்திரை கிழித்து

நகரைவிட்டு ஓடச்சொல்லி ஊரே திரளும்
பிகரைவிட்டு திட்டச்சொல்லி கட்டிப் புரளும்
சில்லரை இறைக்கும் பக்கம் போலீசு சாயும்
கல்லறைக்கு சென்றாலும் சில்லறைதான் பேசும்

பத்துப்பேரை வெட்டினா அவன் பேட்டை ரொளடி
பேட்டை ரொளடிய வெட்டுறவன் பலே கிள்ளாடி
சப்பை மேட்டருக்கே பட்டாக்கத்தி பாயுது
பட்டைய கிளப்புறதுக்கே கூலிப்படை மேயுது

பேச்சளரு லைப்புன்னாலே ரிஸ்க்கு ஜாஸ்த்தி
பேச்சாளரு மைக்பிடிச்சாலே பென்ச்சு நாஸ்த்தி
அவரவரு ஊருதான் அவரவருக்கு ஒஸ்த்தி
கேழ்வரகு கூழ்குடிச்சாலும் சொந்தவூரே ஆஸ்த்தி…!

எழுதியவர் : இரா.மணிமாறன் (22-Oct-15, 11:04 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 74

மேலே