ஓடு
அப்பாவின் அரவணைப்பு
ஆத்தாளின் உப்புறைப்பு
மனைவியின் உரிமைஉரசல்
மழலையின் குழையும் கொஞ்சல்
அண்ணன் மார் வழிகாட்டல்
ஆசைத் தங்கைகளின் வம்பிழுப்பு
நட்புக்களின் கைகோர்ப்பு
நல்லுறவு விருந்துக் களிப்பு
தெப்பக் குள நீராட்டம்
திருவிழாக் கொண்டாட்டம்
இத்தனையும் விட்டு விடு
திரைகடல் ஓடு
திரவியம் தேடு
...மீ.மணிகண்டன்