எது நிஜம் உன்னிடம் ?


நீ செய்யும் எல்லாவற்றையும்

உன் நிழலும் செய்கிறது

உன்னை போல் அழகாய்

உன்னை காதலிக்கும் நான்

உன் நிழலின் அழகில் மயங்கினாலும்

களங்கம்தான் என் காதலுக்கு

என் எதிரே வருகையில்

உன் நிஜத்தை காட்டு நிழலை பூட்டு

எழுதியவர் : rudhran (4-Jun-11, 4:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 341

மேலே